பொய் பேசக் கற்றுத் தருவது

மலையின் மீதிருந்த மடத்தில் வசித்து வந்த ஒரு முதிய துறவி சர்க்கரைப் பாகால் ஆன உருண்டை போன்ற ஒரு பொருளைத் தயார் செயதார். சுவைத்துப் பார்த்தார். பின்பு கவனமாக ஒரு குடுவையில் போட்டு அடைத்து தன்னுடைய சாமன்களை எல்லாம் வைக்கக் கூடிய அலமாரியில் வைத்தார். அவருடன் வசித்து வந்த மற்றொரு மாணவனான சிறுவனுக்கு கொஞ்சம் கூட கொடுத்தது இல்லை. அது மட்டும் அல்லாமல் மாணவனைக் கூப்பிட்டு அந்தக் சர்க்கரை பாகு உருண்டையானது மிகவும் கொடிய விஷம் அதனை சாப்பிட்டால் உடனடியாக மரணம் ஏற்படுவது நிச்சயம் என்று எச்சரித்து அனுப்பினார்.

ஆனால் சிறுவனுக்கோ அந்த சர்க்கரைப்பாகு உருண்டையை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஒரு நாள் ஆசிரியரான மடத்து துறவி வெளியே சென்றிருந்த போது குடுவையினை எடுத்தான், அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிடும் போது சர்க்கரைப் பாகானது அவனுடைய முகத்திலும் முடியிலும் பட்டுத் தெரித்தது. ஆனாலும் அதன் சுவையானது பையனை எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட வைத்தது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குடுவையை நடைபாதையில் போட்டு உடைத்தான்.

தன்னுடைய வேலையை முடித்துத் திரும்பிய மடத்துத் துறவியானவர் பையன் இதயமே வெடித்து விடும்படி வேகமாக கத்திக் கொண்டே அழுது கொண்டிருந்ததைப் பார்த்தார். "என்ன ஆச்சு?" என்றார்.

"உங்களுடைய குடுவை!" என்று தேம்பியவாரே கூறிய பையன், "உங்களுடைய குடுவையை தெரியாமல் உடைத்து விட்டேன், நீங்கள் என்னை எப்படியும் தண்டிப்பீர்கள் என்று நினைத்து சாகுவதற்கு முடிவெடுத்தேன். அதனால் நீங்கள் சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்து இருந்தும் கூட அந்த கொடிய விஷத்தினை வாய் நிறைய எடுத்து சாப்பிட்டேன். அப்படி சாப்பிட்டும் சாகததால், என்னுடைய மேலங்கி, முடி, உடல் என எல்லா இடத்திலும் தெளித்தேன். அப்படி இருந்தும் நான் இன்னும் சாகவில்லை" என்று கூறிய வாரே "ஓ!வென்று" அழ ஆரம்பித்தான்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts