சிலையை கைது செய்

ஒரு வியாபாரி 50 உருளை காட்டன் துணியினை தன்னுடைய தோளில் தூக்கிக் கொண்டு விற்பதற்காக நல்ல வெயிலில் நடந்து வந்த போது மிகவும் களைத்து விட்டான். கொஞ்சம் தூரத்தில் தெரிந்த பெரிய புத்தர் கல் சிலையின் பின்பு கொஞ்சம் நேரம் ஒய்வெடுக்க அமர்ந்தான். ஆனால் களைப்பு மிகுதியால் உட்கார்ந்த இடத்திலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விட்டான். அவன் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது தன்னுடைய காட்டன் துணி உருளைகள் காணமல் போனதைக் கண்டு பிடித்தான். உடனடியாக பக்கத்திலிருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தான்.

ஓ-ஒகா என்ற நிதிபதி வியாபாரியின் புகாரினை விசாரிப்பதற்காக அமர்த்தப் பட்டார். விசாரனை முடிவில் புத்தர் சிலையே துணிகளை திருடியதாக நிதிபதி முடிவு செய்தார். "புத்தர் மக்களுடைய நலன்களை கவனிக்க வேண்டும், அவர் தன்னுடைய தெய்விகப் பணியிலிருந்து தவறியதால், அந்த புத்த சிலையை கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்" என்று நிதிபதி குற்றத்திற்கான தண்டனையாக அறிவித்தார்.

காவலாளிகளும் கல் சிலையை கைது செய்து நிதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். இதற்குள் வேடிக்கையான இந்த தண்டனையைக் கேள்விப் பட்ட மக்கள் கூட்டமாக கூடி அந்த சிலையை பின் தொடர்ந்து வந்து 'நிதிபதி என்ன மாதிரியான தண்டனை கல் சிலைக்கு கொடுக்க போகிறார்' என்று எண்ணி தங்களுடன் குசுகுசுவென பேசிக் கொண்டும், சத்தமிட்டு சிரித்துக் கொண்டும் நிதி மன்றத்தினை அடைந்தனர்.

பெருங்கூட்டத்தினைப் பார்த்த ஒ-ஒகா வந்தவர்களைப் பார்த்து, "சத்தமிட்டு சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் நிதிமன்றத்தில் நுழைவதற்கு உங்களுக்கு எந்த உரிமை இருக்கிறது? நீங்கள் நீதி மன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக உங்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப் படக் கூடும்" என்று மக்களைப் பார்த்துக் கூறினார்.

ஆனால் மக்கள் நிதிபதியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு தயாராக இல்லை. "உங்களுக்கு சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் ஆனால் இந்த முறை அபராதத் தோடு விட்டு விடுகிறேன். ஒவ்வொருவரும் ஒரு உருளை காட்டனை நிதிமன்றத்தில் முன்று நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும், யார் ஒருவர் தவறினாலும் அவர் கைது செய்யப் படுவது நிச்சயம்" என்று அறிவித்தார் நிதிபதி.

மக்கள் கொண்டு வந்த அபராத உருளைக் காட்டன் துணியில் ஒரு உருளையானது வியாபாரியின் துணியினை ஒத்திருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. அதைக் கொண்டே உண்மையான திருடனை கண்டுபிடித்து, வியாபாரியின் அனைத்து பொருட்களும் அவனிடமிருந்து மிட்கப் பட்டது. மற்ற காட்டன் உருளைத் துணிகள் அனைத்தும் ஊர் மக்களுக்கே திருப்பித் தரப்பட்டது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts