பிசாசை துரத்து

இருக்கும் போலிருக்கிறதே" என்று கதையைக் கேட்ட ஸென் ஆசிரியர் அவனைப் பார்த்துக் கூறினார். "ஆமாம், அது நான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அறிந்து வைத்து இருக்கிறது. நான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு வைத்திருந்து என்னிடமே திரும்ப சொல்கிறது" என அசிரியரைப் பார்த்து பரிதாபமாக கூறினான். "அந்த பிசாசை நாம் பாராட்டமல் இருக்க முடியாது. இருந்தாலும் நான் கூறுவைதைப் போல் அடுத்த முறை செய்" என்று அவன் காதில் ஒரு விஷயத்தைக் கூறினார்.

அன்று இரவு வந்த பிசாசிடம், ஸென் ஆசிரியர் கூறியவாறு "நீ உண்மையிலேயே புத்திச்சாலியான பிசாசு" என்று கூறியவன், மேலும் தொடர்ந்து "உன்னிடமிருந்து நான் எதையும் மறைக்க முடியாது. நீ என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் அளித்தால், நான் என்னுடைய நிச்சய தார்த்தை நிறுத்தி விடுகிறேன். மேலும் வாழ்நாள் முழுவதும் தனி மனிதனாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன்" என்று அவனுடைய முன்னாள் மனைவி இன்னாள் பிசாசினைப் பார்த்துக் கூறினான். "உன்னுடைய கேள்வியைக் கேள்", என்று பிசாசு கூறியது தான் தாமதம் கீழே ஒரு பெரிய பின்ஸ் மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி பின்ஸை எடுத்துக் கொண்டு, "என்னுடைய கையில் எத்தனை பின்ஸ் இருக்கிறது என்று சொல்" என்றான்.

அந்த நிமிடமே அந்தப் பிசாசு அவன் கண்களிலிருந்து மறைந்தது. அன்று சென்றதுதான் என்றுமே திரும்பி வரவில்லை.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts