பாய்ஷாங்கும் குள்ள நரியும்

ஒரு சமயம் பாய்ஷாங் தொடர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது தினமும் ஒரு முதியவர் மற்ற ஸென் துறவிகளுடன் மடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எல்லாத் துறவிகளும் சொற்பொழிவு முடிந்து செல்லும் போது அந்த முதியவரும் சென்று விடுவார். ஒரு நாள் எல்லாரும் சென்று விட்டார்கள். ஆனால் முதியவர் மட்டும் செல்லாமல் அங்கேயே இருந்தார். பாய்ஷாங் "யார் நீ? எதற்காக இன்னும் எனக்கு முன் நின்று கொண்டிருக்கிறாய்?" என்றுக் கேட்டார்.

அதற்கு அந்த முதியவர், "நான் மனிதன் அல்ல, வெகு காலங்களுக்கு முன்பு காசியப புத்தாக் காலத்தில் நான் தலைமை புத்த மதக்குருவாக இந்த மலையில் இருந்தேன். அந்த சமயத்தில் ஒரு துறவி என்னிடம் 'தன்னொளி பெற்ற ஒரு மனிதன் கர்மவினையான காரணகாரியத்திற்கு கட்டுபட்டவனா?' என்று கேட்டார். நான், 'அப்படிப் பட்டவன் காரணகாரியத்திற்கு கட்டுப் பட்டவன் அல்ல' என்று பதில் கூறினேன். இதன் பயனாக நான் ஐநூறு முறை குள்ளநரியாக பிறக்க வேண்டியதாயிற்று. இந்த சாபத்தில் இருந்து விடுவிக்கும் படியான ஒரு வார்த்தையினை எனக்குச் சொல்லி இந்த நரியின் உடலிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

சற்று நிதானித்து நிறுத்திய முதியவர், பாய்ஷாங்கினைப் பார்த்து "தன்னொளி பெற்ற ஒரு மனிதன் கருமவினையான காரணகாரியத்திற்கு கட்டுபட்டவனா? இல்லையா" என்று கேட்டார். அதற்கு பாய்ஷாங், "எப்படிப் பட்டவனும் காரண காரியச் சட்டத்திற்கு கட்டு பட்டவனே, எவனாலும் கர்மவினையிலிருந்து தப்ப முடியாது" என்று பதில் அளித்தார்.

அதைக் கேட்ட மறுகணமே அந்த முதியவர் தன்னொளியினைப் பெற்றார். பாய்ஷாங்கினை தலைகுனிந்து வணங்கி விட்டு, "நான் என்னுடைய குள்ளநரியின் உடலிலிருந்து விடுவிக்கப் பட்டு விட்டேன். என்னுடைய உடல் மலையின் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. நான் உங்களுக்கு ஒரு வேண்டுகோளை விட்டு விட்டுச் செல்கிறேன். மடாதிபதியே என்னுடைய கரும காரியங்களை ஒரு மதகுருவுக்கு தேவையான மரியாதையுடன் செய்ய வேண்டும்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்.

பாய்ஷாங் தலைமைத் துறவியை அழைத்து, "எல்லாருக்கும் இன்று மதியம் சாப்பாட்டிற்கு பின்பு ஈமச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மணியடித்து அழைப்பு விடுங்கள்" என்று கூறினார். மடத்தில் இருந்த மற்ற துறவிகள் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். "யாரும் சமிபத்தில் மடத்தின் அருகில் உயிர் நீக்க வில்லை. மரணப் படுக்கையிலோ யாரும் இல்லை. யாருடைய பிணமோ சவக்கிடங்கில் இல்லை. எதற்காக மடாதிபதி நம்மை ஈமச்சடங்கிற்கு அழைத்தார்" என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.

பாய்ஷாங் மதிய உணவிற்குப் பின் வெகு தொலைவிற்குத் துறவிகளை மலையின் அடுத்தப் பக்கத்திற்கு பாறைகளின் வழியாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார். தன்னுடைய கைத்தடியால் இலைகளால் மூடப்பட்டிருந்த நரியின் உயிரற்ற உடல் ஒன்றினைக் குத்தி மேலே தூக்கிக் காட்டினார். பின்பு ஒரு மதகுருவிற்கு செய்யக் கூடிய அனைத்துக் கருமகாரியங்களையும் செய்து சிதைக்கு தீ மூட்டி எரித்தார். அன்று மாலை தன்னுடைய மடத்தில் உள்ளவர்கள் அனைவரையும் இறைவழி பாட்டிற்கு கூடும் சபைக்கு வரச் சொன்னார். தன்னுடைய மடாதிபதிக்குரிய இருக்கையில் அமர்ந்தவர் அங்கு வந்திருந்தவர்களிடம் குள்ளநரியைப் பற்றிய முழுக் கதையையும் சொல்லி முடித்தார்.

ஹூவாங்-போ என்ற துறவி அவருக்கு முன்பு வந்து, "நீங்கள் கூறியது போல், அந்த முதியவர் திருப்பக் கூடிய வார்த்தையை கூறாததால் குள்ளநரியாக ஐநூறு முறை பிறக்க வேண்டியதாயிற்று. அப்படி இல்லாமல் சரியான வார்த்தையை யார் கேட்ட போதும் ஒவ்வொறு முறையும் அந்த முதியவர் கூறியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?" என்று சபையில் உள்ளவர்கள் அனைவருக்கும் கேட்குமாறு கேட்டார்.

பாய்ஷாங், "கொஞ்சம் எனக்கு அருகில் வந்தால் என்னால் பதில் கூற முடியும், இங்கே வா" என்று கூப்பிட்டார். பாய்ஷாங்கின் அருகில் சென்ற ஹூவாங்-போ அவருடைய கன்னத்தில் பளாரேன அறைந்தார்.

கைத்தட்டி சிரித்த பாய்ஷாங், "எனக்குத் தெரியும் குள்ளநரியின் தாடியானது சிவப்பு நிறம் உடையதென்று, ஆனால் இங்கே இருக்கிறது மற்றொரு சிவப்புத் தாடியை உடைய குள்ளநரி" என்று ஹூவாங்-போவினை நோக்கி கையைக் காட்டினார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts