மரச் சவப்பெட்டி

ஒரு முதிய விவசாயியானவர் மிகவும் வயதாகி விட்டதால் வயல் வெளியில் சென்று வேலை செய்ய முடியவில்லை. அந்த முதிய விவசாயி தன் வீட்டின் முன் தாழ்வாரத்தில் அமர்ந்து மகன் வயலில் வேலை செய்வதை தினமும் பார்த்து வந்தார். விவசாயின் மகன் வயலில் எருதுகளைப் பூட்டி உழுது கொண்டோ, பயிரிட்டுக் கொண்டோ, களைகளை பிடிங்கிக் கொண்டோ எதாவது ஒரு வேலையினைத் தினமும் செய்து வந்தான். கடினப் பட்டு வயலில் வேலை செய்யும் போது தன் தந்தையை வயலில் இருந்துப் பார்ப்பான். முதியவர் எப்பொழுதும் போல் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டிருப்பார். "அவர் எந்த வேலைக்கும் உபயோகம் இல்லை" என்று மனதில் நினைத்த மகன், "அவர் எந்த வேலையையும் செய்வதும் இல்லை" என்று மனதில் பொருமிக் கொண்டே வேலையை செய்து வந்தான்.

ஒரு நாள் அவனுடைய பொருமளும் கோபமும் எல்லையை மீறி விட்டது, வயலை விட்டு வெளியே வந்தவன், பக்கத்தில் இருந்த மரங்களை எல்லாம் செதுக்கி அழகானதொரு சவப்பெட்டியினை நேர்த்தியாகச் செய்தான். சவப்பெட்டியை இழுத்துக் கொண்டு தாழ்வாரத்திற்கு வந்தவன் தன் தந்தையை சவப் பெட்டிக்குள் சென்று படுக்குமாறு கூறினான். அந்த முதியவரோ எந்த மறுப்பும் காட்டாமல் சவப் பெட்டியின் உள்ளே சென்று படுத்துக் கொண்டார்.

சவப் பெட்டியினை நன்றாக அடித்து மூடிவிட்டு தரதரவென வயலின் வழியாக இழுத்துச் சென்றான். வயலின் முடிவில் செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. அந்தப் பாறைக்கு மறுபுறம் மிகவும் அதள பாதளமான பள்ளம். செங்குத்து பாறைக்கு அருகில் வந்தபோது, சவப் பெட்டியின் உள்ளே இருந்து "டபடப" வென மெதுவாக தட்டும் சத்தம் கேட்டது. மூடியைத் திறந்தான். வயதான அந்த முதியவர் எந்தவிதமான கலக்கமும் இல்லாமல் சவப் பெட்டியில் படுத்துக் கொண்டே தன்னுடைய மகனை உற்று நோக்கினார், பின்பு "மகனே, எனக்குத் தெரியும் இந்த செங்குத்தான பாறையின் உச்சியிலிருந்து என்னைத் தள்ளிவிடப் போகிறாய் என்று, அதனை நீ செய்வதற்கு முன்பு, உன்னிடம் ஒன்று கூற விரும்புகிறேன்" என்றார்.

அலட்சியமான மனப்பான்மையுடன் முறைப்பாக "என்ன அது?" என்றான் மகன். அந்த முதியவர் மெதுவான குரலில் எந்த சலனமும் இல்லாமல், "மகனே நீ விரும்பினால் என்னைப் பாறையின் உச்சியிலிருந்து தள்ளி விட்டு விடு. ஆனால், இந்த நல்ல மரத்தினால் செய்த சவப்பெட்டியை பத்திரமாக எடுத்து வை. பிற்காலத்தில் உன்னுடையக் குழந்தைகளுக்கு உபயோகப் படக்கூடும்" என்றார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts