காரணங்கள்

ஒரு சமயம் செம்மறி ஆட்டுக் குட்டியானது மலையில் இருந்த நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது. அதே சமயத்தில் நீரோடையின் கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு புலியானது தண்ணீர் பருக வந்தது, செம்மறி ஆட்டுக் குட்டியினைப் பார்த்தது. ஆட்டிடம் "ஏன் நீ என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்குகிறாய்?" என்றுக் கேட்டது.

ஆடு "நான் எப்படி உன்னுடைய தண்ணீரினைக் கலக்கி இருக்க முடியும்?, நான் பல்லமான பகுதியில் இருக்கிறேன், நீ மேடான பகுதியில் இருக்கிறாய்" என்று பதில் கூறியது.

"நீ நேற்றே கலக்கி சேராக்கி இருக்கிறாய்."

"நான் நேற்று இந்த பக்கம் கூட வரவில்லை"

"அப்படியானல் அது உன்னுடைய அம்மாவாக இருந்திருக்கக் கூடும்"

"அவர்கள் என்னுடைய அம்மாவை பிடித்துக் கொண்டு போனார்கள். என்னுடைய அம்மா இறந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்"

"அப்படியானல் உன்னுடைய அப்பாவாக இருந்திருக்கக் கூடும்"

"என்னுடைய அப்பாவா? எனக்கு அது யார் என்று கூடத் தெரியாது"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. அது உன்னுடைய தாத்தாவாகவோ அல்லது முப்பாட்டனாகவோ இருந்திருக்கக் கூடும். கொஞ்ச நாட்களாகவே என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் உன்னை சாப்பிடப் போகிறேன்!" என்ற புலி பயங்கரமாக உறுமியது. உறுமிய வேகத்தில் ஆட்டின் மீது பாயந்தது, ஆட்டுக் குட்டியானது அன்றைய மதிய உணவானது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts