மடாதிபதியின் ஆசிரியர்

ஒரு சமயம் ஒரு குறிப்பிட்ட ஸென் பிரிவைச் சேர்ந்த தலைமை மடாதிபதி தனக்கு ஆதரவு அளிக்கும் புரவலரான மாகணத்தின் தலைவரை பார்ப்பதற்க்காக தாரைதப்பட்டைகள் முழங்க தன்னுடைய பரிவாரங்களுடன் உயர்ந்த வகையான துணிமணிகளை அணிந்து கொண்டு மூடிய பல்லக்கு ஒன்றில் மாகணத்தின் தலைநகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்படிச் சென்று கொண்டிருந்த போது குதிரையை ஓட்டுபவன் தனக்கு புதுக் காலனிகள் வேண்டும் என்று பரிவாரங்களை ஓரிடத்தில் நிறுத்தி ஓய்வெடுக்க வைத்து விட்டு பக்கத்திலிருந்த சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்களிடம் யாரிடம் நல்லத் தரமான காலனிகள் கிடைக்கும் என்று விசாரித்தான்.

வைக்கோல் காலனிகளைச் செய்வதில் திறமை வாய்ந்தவன் என்று ஒரு முதியவரை கூலித் தொழிலாளிகள் அனுப்பி வைத்தனர். முதியவர் புதிய செருப்புகளுடன் குதிரை ஓட்டுபவனைத் தேடிக் கொண்டு வந்தார். மடாதிபதி தன்னுடைய மூடுபல்லக்கிலிருந்து நடப்பதைக் கவனித்து கொண்டிருந்தவர் செருப்பினைக் கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் மூர்ச்சையடையும் நிலைக்கு சென்று விட்டார். அதிர்ச்சியுடனும் அவமானத்துடனும் தட்டுத் தடுமாறி எழுந்தவர் சிவிகையை விட்டு இறங்கி அந்த முதியவரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பயபக்தியுடன் வணங்கி எழுந்தார்.

அந்த முதியவர் வேறு யாரும் அல்ல, திறந்த ஆன்மிகவாதியும் தன்னொளியைப் பெற்றவரும், மடாதிபதியின் குருவுமான டோசுய். மடத்தில் பலருக்கு சொல்லி அறிவொளியை ஏற்றிய டோசுய் திடிரென ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து மறைந்து விட்டார். அன்று காணமல் போனவரை இன்று தான் பார்க்கிறார் முந்தைய சீடனான இன்றைய மடாதிபதி.

ஆசிரியர் டோசுய் மிகவும் கருனையுடன் அன்பாக தற்பொழுதைய மடாதிபதியுடன் தன்னுடைய பழங்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பேசி முடித்து கிளம்பும் போது ஆசிரியர், "மதிமயங்கும் அளவிற்கு உயர்குடிகளுடன் கூடி உன்னுடைய தன்னிலையினை இழந்து விடாதே" என்றார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts