மனமும் குதிரை ஏற்றமும்

ஒரு சமயம் ஸென் குரு பென்கேய் தூக்குத் தண்டனை அளித்து மரண தண்டனை விதிக்கப் படும் இடத்திற்கு சென்று பல நாட்கள் தங்கி இருந்தார். இயேசுவை சிலுவையில் அறைந்ததைப் போல் மக்களுக்கு மரண தண்டனை விதித்து நடக்கும் கொலைக் களத்தில் இரவில் தங்கி தன்னுடைய ஸென் மனதினை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அதற்கு பக்கத்தில் இருந்த மேடான கரை ஒன்றில் படுத்துக் கொண்டிருந்தார். அவர் படுத்துக் கொண்டிருந்த பகுதியை சுற்றி குதிரைகளை அடைக்கும் பெரிய பட்டி இருந்தது.

அவர் படுத்துக் கொண்டிருந்த போது, போர் வீரன் ஒருவன் பட்டியில் இருந்த குதிரை ஒன்றினை வேகமாக நய்ய சாட்டையால் புடைத்துக் கொண்டிருந்தான். அவன் குதிரையை அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பென்கேய் வேகமாக அடித் தொண்டையிலிருந்து, "ஹே!, நீ என்ன நினைத்துக் கொண்டு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கத்தினார்.

ஆசிரியர் கத்துவதைக் கேட்டும் அதைப் பற்றி ஒன்றும் கண்டு கொள்ளாமல் போர் வீரன் அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். சாட்டையால் நன்றாக குதிரையை அடித்துக் கொண்டு, நான்கு கால் பாய்ச்சலில் ஆசிரியரை நோக்கி ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மறுபடியும் ஆசிரியர் "ஹே!, நீ என்ன நினைத்துக் கொண்டு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று அவன் வரும் பக்கம் பார்த்துக் கத்தினார்.

ஆசிரியர் விடாமல் மூன்று முறை கத்தியபோது, போர் வீரன் தன்னுடைய குதிரையை நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கி ஆசிரியரை நோக்கி வந்தான். போர் வீரன் நின்றிருந்த ஸென் குருவைப் பார்த்து, அவர் சாதரணமான மனிதன் இல்லை என்பதனை புரிந்து கொண்டான். "என்னைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தாயே, ஏதாவது என்னிடம் சொல்ல விரும்புகிறாயா?" என்று ஆசிரியரைப் பார்த்து போர் வீரன் கேட்டான்.

பென்கேய், "சாட்டையால் குதிரையை ஒழுங்கற்ற முறையில் அடிப்பதை விட்டுவிட்டு, ஏன் உன் மனதை சாட்டையால் அடித்து, அதனை ஒருமுகப் படுத்த பயிற்சி அளிக்கக் கூடாது?" என்று கேட்டார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts