தேனீர் விருந்து

வந்த விருந்தினரை நோக்கி ஆசிரியர் சாஒ சாவ், "முன்பு நீங்கள் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறிர்களா?"
"ஆமாம், நான் வந்திருக்கிறேன்" என்ற பதில் கிடைத்தது விருந்தினரிடமிருந்து.
மகிழ்ச்சியுடன் சாஒ சாவ், "ஓ! முன்பே இங்கு வந்திருக்கிறிர்களா?, அப்படியானால் தேனீர் விருந்தில் கலந்து கொள்ள வாருங்கள்" என்றார்.
கொஞ்சம் நேரம் கழித்து வந்த மற்றொரு விருந்தினரைப் பார்த்து, "சகோதரா!, இதற்கு முன்பு இங்கு வந்திருக்கிறாயா?" என்று கேட்டார்.
"இல்லை, நான் வந்ததில்லை"
"அப்படியா! முன்பு வந்ததில்லையா?. பரவாயில்லை. தேனீர் குடிக்க வாருங்கள்" என்றார் ஆசிரியர்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த தலைமைத் துறவிக்கு வியப்பும் சந்தேகமும் வந்தது. "இந்த இரண்டு விருந்தினர்களும் ஒருவருக்கொருவர் முரண்பாடான பதிலினைத் தந்தார்கள். ஆனால் இரண்டு பேரையுமே தேனீர் விருந்திற்கு அழைத்தற்கு காரணம் என்ன?" என்று வினவினார்.
சாஒ சாவ் "ஒ! தலைமைத் துறவியே இங்கே வாருங்கள்" என்று கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டார்.
"ஆம், வந்து விட்டேன்" என்று பக்கத்தில் வந்தார் தலைமைத் துறவி.
"வாருங்கள், தேனீர் அருந்தப் போகலாம்"

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts