நள்ளிரவு சுற்றுலா

ஆசிரியர் ஸென்கேயிடம் பல மாணவர்கள் தியானம் பற்றி கற்று வந்தனர். அவர்களில் ஒருவன் நள்ளிரவில் எழுந்து மடத்தின் சுவரில் ஏறி அடுத்தப் பக்கத்தில் குதித்து, பக்கத்தில் உள்ள நகரத்திற்கு ஜாலியாக சென்று சுற்றிவிட்டு இன்பக் களியாட்டங்களை முடித்துவிட்டு வருவது வழக்கம்.

பல படுக்கைகள் கொண்ட அந்த துயில் கூடத்தினை ஒருமுறை மேற்பார்வை செய்ய வந்த ஆசிரியர், மாணவன் ஒருவனைக் காணததைக் கண்டார். பக்கத்திலேயே உயரமான நாற்காலி ஒன்றும் சுவரின் அருகில் போடப் பட்டிருந்ததைப் பார்த்தார். நாற்காலியை அங்கிருந்து நகர்த்தி விட்டு அந்த இடத்தில் நின்று கொண்டார்.

சுற்றித் திரிந்தவன் உள்ளே நுழைந்த போது, ஸென்கேய் நாற்காலிக்கு பதிலாக நிற்பதை அறியாமல், அவர் தலையில் காலை வைத்து மெதுவாக தரையில் குதித்தான். குதித்தவன், தான் என்ன செய்தோம் என்பதனை அறிந்ததும் அச்சத்தால் திடுக்கிட்டான்.

ஸென்கேய், "காலை வேளையில் மிகவும் குளிராக இருக்கும். கவனமாக இருப்பது நல்லது. நீர்க்கோத்துக் கொண்டு சளி பிடித்துக் கொள்ளப் போகிறது" என்றார்.

இந்த நிகழ்சிக்குப் பிறகு அந்த மாணவன் இரவில் வெளியே செல்லவேயில்லை.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts