ஜென் கதைகள்: புளித்த மிஸோ

மிஸோ என்பது ஜப்பானியர்கள் உபயோகப் படுத்தும் ஊறுகாய் போன்ற சத்துள்ள உப்பான சாப்பிடும் உணவுப் பொருளாகும். ஜப்பானியர்கள் மிஸோ சூப்பினை காலையில் உடல் சத்திற்காக சாப்பிடுவார்கள். மிஸோவினை உபயோகப் படுத்தி மதிய, இரவு உணவுப் பதார்த்தங்களையும் செய்வார்கள். மிஸொவினை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து புளிக்க வைத்து எடுத்து வைத்து விடுவார்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மிஸோ பல நாடகளுக்கு கெடாமல் இருக்கும். மிஸொவுடன் அரிசி, கோதுமை, அவரைவிதை மற்றும் சோயா மொச்சைக் கொட்டை போன்ற பொருட்களுடனும் சேர்க்கப் பட்டு சாப்பிடுவதற்கு உபயோகப் படுத்தப் படும்.
மிஸோவினைப் பற்றிய இந்த சிறுகுறிப்பு இன்றைய ஸென் கதைக்கு உபயோகமான தகவலாகும்.

பென்கேயின் மடத்தில் இருந்த சமையல்காரத் துறவி டைரியோ (ஸென் மடத்தில் இருக்கும் துறவிகள் தியானம் மட்டும் அல்லாமல் மற்ற பிற வேலைகளையும் செய்வது வழக்கம். சுழற்சி முறையில் ஒரு வேலையிலிருந்து மற்ற வேலைகளுக்கு அனுப்பப் பட்டனர்.), பென்கேயின் வயதினைக் கருத்தில் கொண்டு இனி அவருக்கு புதிதாக தயார் செய்த சுவையுள்ள மிஸோவினை மட்டுமே தருவது என முடிவெடுத்தான். கொஞ்ச நாட்களாகவே தனக்கு வரும் மிஸோவானது சுவையுடனும் மிகவும் புதிதாக தாயாரிக்கப் பட்டதாகும் இருந்ததைக் கவனித்த பென்கேய் தன்னுடைய சீடர்களை அழைத்து "யார் இப்பொழுது எல்லாம் சமைப்பது?" என்று கேட்டார்.

டைரியோவினை அவரிடம் அனுப்பி வைத்தார்கள். டைரியோவிடமிருந்து தன்னுடைய வயதிற்கும் தகுதிக்கும் புதிதாக தயாரிக்கப் பட்ட மிஸோக்களையேத் தான் சாப்பிட வேண்டும் என்பதினைக் கேட்டறிந்தார். அதைக் கேட்ட உடனேயே, "அப்படியானல், இனி நான் சாப்பிடவேக் கூடாது என்று சொல்கிறாயா?" என்றவர் தன்னுடைய அறைக்குள் சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார்.

டைரியோ கதவின் வெளியே நின்று கொண்டு ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டான். பென்கேய் எந்தப் பதிலும் கூறவில்லை. ஏழு நாட்களுக்கு டைரியோ கதவின் வெளிப்புறம் உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் அறையின் உள்ளே இருந்தார்.

முடிவில் நம்பிகையையும் பொருமையையும் இழந்த டைரியோ சத்தமாக பென்கேயிடம், "கிழவா, நீ வேண்டுமானல் சாப்பிடாமல் நன்றாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞனான சீடன் சாப்பிட வேண்டும். என்னால் இப்படியே தொடர்ந்து உணவு சாப்பிடாமலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது!" என்று கத்தினான்.

அந்த சமயத்தில் கதவினைத் திறந்தார் பென்கேய். புன்னகையுடன் டைரியோவைப் பார்த்த பென்கேய், "என்னுடைய சீடர்கள் எதைச் சாப்பிடுகிறார்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன். நீ ஆசிரியராகும் போது இதனை மறந்துவிடாதே" என்றார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts