ஆசிரியரினை ஆச்சரியப் படுத்து

ஒரு மடத்தில் இருந்த முதிய ஸென் ஆசிரியரின் குண நலன்களைப் பார்த்து மாணவர்கள் வியந்தனர். ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர் என்றோ அல்லது எப்பொழுதும் எதாவது வேலை செய்யச் சொல்கிறார் என்றோ ஏற்பட்ட ஆச்சரியம் அல்ல அது. அந்த ஆசிரியர் எதற்கும் கவலைப் படுவதோ அல்லது ஆனந்தப் படுவதோ கிடையாது. எப்பொழுதும் ஒரே மாதிரியாக காணப் படுவார். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் எதற்காகவோ கவலைப் படுவதோ, கவலையே இல்லையென்றால் சந்தோஷமாவது படாமல் இருக்க மாட்டார்கள். அதணால் இந்த ஆசிரியரைப் பார்த்து மாணவர்கள் வியந்ததில் தவறு ஒன்றும் இல்லை.

ஆனால் வியந்ததோடு நிறுத்தாமல் ஒரு நாள் ஆசிரியரை சோதித்து பார்த்து விடுவது என முடிவு செய்தனர். நன்றாக இருட்டிய பின்பு வராந்தாவின் ஒரு பகுதியில் ஆசிரியருக்கு தெரியாமல் மறைந்து கொண்டு அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த ஸென் ஆசிரியரும், துறவியுமான முதியவர் ஒரு முனையிலிருந்து சுடச் சுட ஆவி பறக்க தனது கையில் தேனீர் கோப்பையினை எடுத்துக் கொண்டு மறு முனையிலிருந்த தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மாணவர்கள் மறைந்திருந்த இடத்திற்கு கொஞ்ச தூரம் சென்றதும் பேய்க் குரலுடன் மிகுந்த வேகமாக இருந்த சக்தி எல்லாம் திரட்டி மாணவர்கள் பயங்கரமான காட்டுக் கத்தல் கத்தி ஊளையிட்டனர்.

ஆசிரியர் எந்த விதமான ஆச்சரியத்தையும் காட்டமல் அமைதியாக நடந்து தன்னுடைய அறைக்கு சென்றவர், அங்கிருந்த மேஜையில் தன்னுடைய கையிலிருந்த தேனீர் கோப்பையை அமைதியாக வைத்து விட்டு, சுவரில் சாய்ந்து கொண்டு சத்தமாக தன்னுடைய அதிர்ச்சியின் காரணமாக "ஓவொ..." வென அழ ஆரம்பித்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts