ஜென் கதைகள்: பொக்கிஷம்



ஒர் ஊரில் ஒருவன் நன்கு வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அப்போது அந்த ஊரில் பொக்கிஷம் இருக்கும் இடத்தைப் பற்றிய வதந்தி பரவிக் கொண்டிருந்தது. ஆகவே அந்த ஊரில் உள்ளவர்கள், பாலைவனத்தில் நின்று தூரத்தில் இருக்கும் மலையை பார்த்து நிற்கும் போது, நமது நிழல் விழும் இடத்தில் பொக்கிஷம் இருப்பதாக பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட அவன், உடனே வியாபாரத்தை விட்டு, பொக்கிஷத்தை தேட பாலைவனத்திற்கு மறுநாள் காலையிலேயே சென்று, தூரத்தில் இருக்கும் மலையைப் பார்த்து நின்று, அவன் நிழல் விழம் இடத்தில் குழியைத் தோண்ட ஆரம்பித்தான்.

அதுவரை வியாபாரத்தின் மீது முழு கவனம் செலுத்திய அவன் பொக்கிஷத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தான். பொக்கிஷத்தைப் பெறுவதற்காக காலையில் இருந்து நிழல் விழுந்த இடத்தில் தோண்டிக் கொண்டிருந்தவனது நிழல், மாலையில் காலடிக்குள் வந்து விட்டது. அதனால் ஏமாற்றமடைந்த அவன் அழுது புலம்பிக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாக வந்த ஜென் துறவி ஒருவர், அவனது செயலைக் கண்டு சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார். பின் அவனிடம் "இப்போது தான் உன் நிழல் பொக்கிஷம் உள்ள இடத்தை சரியாக காட்டுகிறது. அதுவும் அந்த பொக்கிஷம் வேறு எங்கும் இல்லை, உன்னுள் தான் உள்ளது" என்று சொல்லிச் சென்றார்.

ஆகவே இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்வதை விட்டு, இல்லாத ஒன்றிற்கு ஆசைப்பட்டால். கடைசியில் இது நான் நடக்கும்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts