ஜென் கதைகள்: நிலவைச் சுட்டிக் காட்டு

ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும்.

முதலாம் துறவி சா'ன் குரு ஃபாயானிடம் "குருவே, உங்களிடம் நான் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. 'நிலா' என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்" என்று கேட்டான்.

" 'சுட்டு' என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் சா'ன் குரு.

அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, "குருவே, உங்களிடம் 'நிலா'வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. 'சுட்டு' என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்" என்று கேட்டான்.

"நிலா" என்பதே பதிலாக கிடைத்தது.

"நான் உங்களை 'சுட்டு' என்பதன் பொருளைத் தான் கேட்டேன்" என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், "எதற்காக 'நிலா' என்று பதில் அளித்தீர்கள்?"

"ஏனேன்றால் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்" என்றார் குரு.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts