ஜென் கதைகள்: கனவு உலகம்

ஸொயான் ஸாகுவின் சீடன் ஒருவன் கூறிய நிகழ்ச்சி இது. "எங்களுடைய ஆசிரியர் தினமும் பகலில் சிறுதுயில் (உறக்கம்) போடுவது வழக்கம். நாங்கள் ஆசிரியரை எதற்காக மதிய வேலையில் தூங்குகிறிர்கள் என்று கேட்டதற்கு, 'கான்பூசியஸினைப் போல் நானும் கனவு உலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களையும் அறிஞர்களையும் பார்த்து விட்டு வருகிறேன்' என்று பதில் கூறுவார்."

கான்பூசியஸ் சைனாவில் பிறந்த சிறந்த தத்துவஞானி. அவர் மக்களுக்குத் தேவையான வாழ்க்கைக் கோட்பாடுகளையும், அரசர்களுக்கும், அரசுக்கும் தேவையான அரசாட்சி முறையையும் பற்றி விரிவாக எடுத்துக் கூறியவர். ஆசிரியராக இருந்து பல மாணவர்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கியவர். கான்பூசியஸ் கருத்துக்கள் பல சீன மன்னர்களாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. "இன்னும் வாழ்வதைப் பற்றியே நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை, எப்படி இறப்பைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்" என்றவர் கான்பூசியஸ். அவர் தூங்கிய போது கனவுகளில் பழங்காலத்து முனிவர்களை சந்தித்ததாக விழித்ததும் தன்னுடைய சீடர்களிடம் அந்த முனிவர்களைப் பற்றி கூறுவார்.

"ஒரு நாள் மிகவும் வெப்பமாக இருந்தது. எங்களில் சிலர் மதிய உறக்கம் போட்டோம். எங்கள் ஆசிரிய ஸொயான் ஸாகு எங்களை கடிந்து கொண்டார். 'நாங்கள் கனவுலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களைப் பார்ப்பதற்காக கான்பூசியஸினைப் போல் சென்றோம்' என்று அவர் கூறியதையே அவரிடம் கூறி மடக்கினோம். 'அப்படியா, என்ன செய்தியினை அந்த முனிவர்கள் உங்களிடம் சொல்லி அனுப்பினார்கள்? பதில் சொல்லுங்கள்' என்று எங்கள் பள்ளி ஆசிர்யர் எங்களை கட்டாயப் படுத்தினார்."

"எங்களில் ஒருவன், 'நாங்கள் கனவுலகத்திற்கு சென்று முனிவர்களை சந்தித்து, எங்கள் பள்ளி ஆசிரியர் மதிய வேலையில் உங்களை சந்திப்பதற்கு வருகிறாரா என்று கேட்டோம். நீங்கள் கூறியது போல் யாரும் மதியவேலைகளில் எங்களைப் பார்ப்பதற்கு வருவதில்லை என்று பதில் கூறினார்கள்' என்றான்"

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts