ஜென் கதைகள்: ஒரு துளி நீர்

ஒரு முறை ஸென் ஆசிரியர் கைஸன் குளிக்கும் சுடுநீரில் கலப்பதற்காக தன்னுடைய மாணவன் ஒருவனிடம் வாளியில் குளிர்ந்த நீரினைக் கொண்டு வரச் சொன்னார்.

தண்ணீரினைக் கொண்டு வந்த மாணவன், வெந்நீரில் தேவையான அளவிற்கு குளிர்ந்த நீரினைக் கலந்து விட்டு, மீதியிருந்த கொஞ்சம் நீரினை கட்டாந் தரையில் ஊற்றினான்.

"மடையா" என்று கடிந்து கொண்ட ஆசிரியர், "ஏன் மீதியிருந்த தண்ணீரினை நீ செடிகளுக்கு ஊற்றாமல் கீழே ஊற்றினாய்? இந்த மடத்தில் உள்ள ஒரு சொட்டு நீரினை வீணடிப்பதற்கும் உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று கோபத்துடன் கேட்டார்.

அதைக் கேட்ட அந்த மாணவன் உடனடியாக ஸென்னின் தன்னொளியினைப் பெற்றான். பெற்றவன் தன்னுடைய பெயரினை டேகிசுய் என மாற்றிக் கொண்டான். "ஒரு துளி நீர்" என்பதே டேகிசுயின் அர்த்தம்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts