குடை விதி

ஜப்பானில் பிரபுத்துவம் இருந்த சமயம் அது, மக்களின் தேவைகளும், உபயோகப் படுத்தும் பொருட்களும் அவர்களின் சமுக அந்தஸ்திற்கு தகுந்தவாறு முறைப் படுத்தப் பட்டிருந்தது. ஸென் ஆசிரியர் ஹாகுய்ன் இருந்த ஊரில் ஒரு வசதி மிகுந்த ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரி இருந்து வந்தான். அவன் ஒரு பழமைவாதி. அவனுடைய வீட்டில் வேலைசெய்த வேலைக்காரர்கள் குடையை தன்னுடைய வீட்டிற்குள் எடுத்து வருவதற்கோ அல்லது உபயோகப் படுத்துவதற்கு தடை செய்யப் பட்டிருந்தது. ஆனால் இந்த விதியின் விளைவானது வேலைக்காரர்கள் தங்களுடைய நண்பர்கள் வீடுகளிலோ அல்லது தெரிந்தவர்கள் வீடுகளிலோ தங்களது குடையினை கொடுத்து வைத்திருந்தனர், தேவைக்கேற்றவாறு அவற்றை வெளியே செல்லும் போது நண்பர்களிடமிருந்து பெற்று உபயோகப் படுத்தலாயினர்.

ஒரு சமயம் அந்த வியாபாரியின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருவள் புதுக் குடை ஒன்றினை வாங்கினாள். அந்த குடையினை ஆசிரியர் ஹாகுய்னிடம் கொடுத்து தன்னுடைய பெயரினை குடையில் எழுதுவதற்காக கொண்டு வந்தாள். அவள் கோயிலிற்கு வந்த போது, ஆசிரியருடைய மாணவன் ஒருவன் அந்த குடையினை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அவளுடைய விருப்பத்தினை ஆசிரியரிடம் கூறி எழுதி வாங்கி வருவதாக கூறி சென்றான். மாணவன் ஆசிரியரை சந்தித்து வேலைக்காரியின் விருப்பத்தைக் கூறி, மேலும் அவள் வேலை செய்யும் வியாபாரியின் வீட்டில் இருக்கும் 'குடைக்கு தடா' விதியையும் எடுத்துக் கூறினான்.

மாணவன் கூறியதைக் கவனமாகக் கேட்ட ஹாகுய்ன் தன்னுடைய தூரிகையை கையில் எடுத்து குடையில், 'வெயிலோ கடும் மழையோ, நான் என்னுடைய முதலாளியை மதிக்காமல் இருக்க மாட்டேன்' என்று எழுதிக் கொடுத்தார்.

வேலைக்காரி மாணவன் கொடுத்த குடையைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டாள். படிக்கத் தெரியாத அவளுக்கு, தன்னுடைய பெயரேக் குடையில் எழுதி இருப்பதாக எண்ணி மகிழ்ந்து கொண்டு சென்றாள்.

கொஞ்ச நாள் கழித்து மழை பெய்த சமயம், தன்னுடைய எஜமானனிடம் தனக்கு சில வேலைகள் இருப்பதாள் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள். போகும் வழியில் தன்னுடைய குடையை விரித்து பிடித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தாள். போகும் வழியில் எல்லாம் அவளுடைய குடையை பார்ப்பதும், குசுகுசுவென மற்றவர்களுடன் பேசுவதும் சிரிப்பதுமாக இருந்தனர். எதணால் இப்படி தன்னைப் பார்த்து பேசுவதும், சிரிப்பதுமாக இருக்கின்றனர் என்று எண்ணிய வேலைக்காரி கடைசியில் ஒருவரிடம் அதைப் பற்றிக் கேட்டே விட்டாள்.

உண்மையில் தன் பெயர் இல்லாததையும், அதில் உள்ள வாசகத்தையும் அறிந்தவள், ஆசிரியர் காகுயினிடம் சென்று புது குடை வாங்குவதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சண்டை போட ஆரம்பித்தாள். ஆனால் அவளை உள்ளேக் கூப்பிட்ட ஆசிரியர் எப்படி தன்னுடைய எஜமானிடம் அவள் வேலை செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினார். பின்பு ஆசிரியர் ஹாகுய்ன் தானே வியாபாரியிடம் சென்று, 'வேலைக்காரர்களும் யாரோ ஒருவரின் குழந்தைதான் என்பது உனக்குத் தெரியுமா?' என்றுக் கேட்டார்.

ஆசிரியர் வேலைக்காரர்களுக்காக தன்னுடைய இடத்திற்கே வந்து பரிந்து பேசியதைப் பார்த்து அவருடைய கருணையையும், உயர்ந்த உள்ளத்தையும் எண்ணிய பணக்கார வியாபாரி தன்னுடைய தவறினை எண்ணி வருந்தி 'குடையின் தடா' விதியினை அன்றே நீக்கினார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts