ஜென் கதைகள்: ஓவியனும் ஸென்னும்

ஒரு சமயம் ஜப்பானின் இராணுவத்தில் ஸொகன் என்ற உயரிய பதவி வகித்த ஒருவர் தன்னுடைய விருந்தினர் அறையில் இருந்த டொகோனோமோ எனப்படும் மாடத்தில் கோழியின் அழகான படம் ஒன்றினை மாட்டி வைக்க விரும்பினார்.

அந்த ஊரிலேயே இருந்த சிறந்த ஓவியன் ஒருவனை சந்தித்து, "உங்கள் திறமை எல்லாம் காட்டி எனக்கு ஒரு சிறந்த கோழியின் படத்தினை வரைந்து கொடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

ஓவியர் "ஓ, தாரளமாக, கண்டிப்பா வரைஞ்சு தருகிறேன்" என்றார்.

ஓவியர் உடனே ஃபூஜி மலையின் மேலிருந்த தனது சிறிய ஓவியம் வரையும் அறைக்கு சென்றார். பறவைகளின் உடற்கூறுகளைப் பற்றி அலசி ஆராய்ந்து கூறும் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்தார். முன்பு பறவைகளைப் பற்றி புகழ்பெற்ற ஒவியர்கள் எழுதியதைப் பற்றி வாங்கிப் படித்தார். கோழிகளை ஒரு சிற்பியைப் போல கல்லில் வடிவமைத்தார். ஆயில் வண்ணங்களை உபயோகித்து கோழிகளை வரைந்தார். மரத்தினாலான அச்சுக்களை உபயோகித்து கோழியைப் போல வடிவமைத்தார். ஒரு அச்சிலிருந்து மற்றொரு அச்சு அதைவிட தத்ரூபமாக இருக்கும் படி மற்றொரு படியினையும் எடுத்தார். சமுராய் வீரர்களின் புஸிடோ எனப்படும் வீரம் தோய்ந்த கவசம் அணிந்த கோழியினை உருவாக்கினார். ஒரு சமுராய் வீரன் மற்றொருவனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் போல் இரண்டு கோழிகளின் சண்டைகளை உருவகப் படுத்தினார். சாந்தமே உருவான சாதுக்களைப் போல் கோழிகளை அமைதி தோய்ந்த முகத்துடன் வரைந்தார். சுமி தூரிகையை உபயோகித்து கோழிக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையினை மனதில் நினைத்து அதன் சேட்டைகளையும் அனத்தங்களையும் அனைத்துக் கோணங்களிலும் வரைந்துப் பார்த்தார். கோழியின் உருவங்களை இயற்கைகாட்சிகள் நிறைந்த சூழ் நிலையில் வரைந்துப் பார்த்தார். தானியங்களை தின்னும் நிலையிலும், கோழிச்சண்டை நடப்பதை மக்கள் இரசிக்கும் விதமாகவும் வரைந்தார்.

இப்படியாக பத்து வருடங்கள் ஒடியிருக்கும்.

ஒரு நாள் ஸொகன் அம்புகளை விட்டு பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடிரென ஓவியரிடம் தான் கோழியின் ஓவியம் வரையச் சொன்னது ஞாபகம் வந்தவராக, தன்னுடைய போர்க் குதிரையின் மேல் ஏறி அதனை பறக்க விட்டு கொண்டு ஓவியனுடைய இடத்தை வந்து அடைந்தார். கதவினை திறந்து கொண்டு உள்ளே வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது. உள்ளே நுழைந்தவர் கோழியைப் பற்றி வரைந்த ஓவியங்களின் மாதிரிகள் அந்த அறையின் மேல் முகட்டு வரை தொட்டிருந்ததினைக் கண்டார். கோழிகளின் சிலைகளின் மாதிரிகள் அறை முழுவதும் அடைத்திருந்தது. கோழிகளின் எலும்புக் கூடுகள், ஆயில் வண்ணப் படங்கள் என எங்கும் கோழி, எதிலும் கோழியின் உருவமாக இருந்தது. நிற்பதற்கே இடம் இல்லாத போது உட்காருவதற்கு அங்கே ஏது இடம்?

"எங்கே எனக்காக வரைந்த கோழியினுடைய படம்?" என்று உரிமையுடன் அதட்டிக் கேட்டார் ஸொகன்.

"ஓ!! சுத்தாமாக மறந்தே போய் விட்டேன், மன்னித்து விடுங்கள்", என்று கூறிய ஓவியர். துரிகையை எடுத்தார் ஒரு அரிசியால் செய்த தாளில் இலாவகமாக அப்படியும் இப்படியும் வேகமாக சுழற்றினார்.

"இந்தாருங்கள்" என்று அந்த தாளினை ஸொகனிடம் கொடுத்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts